Advertisement

மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) புதிய பதவி!

கலைநயத்துடன் எதையும் செய்யும் மிதுன ராசி அன்பர்களே!

சூரியன் ரிஷபத்திற்கு வந்திருப்பது சிறப்பு அல்ல. ஆனால் செவ்வாய், சனி, ராகு
ஆகியோரால் நற்பலன் கிடைக்கும். புதன் ஜூன் 3 வரையும், சுக்கிரன் மே20ந் தேதி வரையிலும், ஜூன் 13க்கு பின்னும் நன்மை தருவர். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். எடுத்த காரியம் வெற்றி அடையும். மாத பிற்பகுதியில் முயற்சிகளில் சில தடைகள் வரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன்- மனைவி இடையே அன்பு பெருகும். பண வரவு இருக்கும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு நல்ல லாபம் இருக்கும். புதிய தொழில் தொடங்க
நினைப்பவர்கள் மாத தொடக்கத்தில் நிறைவேற்றவும். மே 22,23ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.

பணியாளர்களுக்கு புதிய பதவி தேடி வரும். எனினும் பொருள் விரயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஜூன் 13க்கு பிறகு சிலர் இடமாற்றம் காணலாம். மேல் அதிகாரிகளை அனுசரித்து போகவும். ஜூன் 6,7 சிறப்பான நாட்களாக அமையும்.

கலைஞர்கள் பின்தங்கிய நிலையில் இருந்து விடுபடுவர். புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.
வருமானம் பெருகும்.

அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.
மாணவர்களுக்கு விரும்பிய பாடம் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். கால்நடை வளர்ப்பில் வருவாய் கிடைக்கும். புதிய சொத்து வாங்கலாம்.

பெண்களுக்கு முன்னேற்றம் அபரிமிதமாக இருக்கும். கணவரின் அன்பு, குடும்பத்தாரிடம் நன்மதிப்பு கிடைக்கும். குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வீர்கள். பணியில் இருப்பவர்கள் அதிக நன்மை பெறுவர். புத்தாடை, நகை வாங்க வாய்ப்புண்டு. விருந்து-விழா என சென்று வருவீர்கள்.

நல்ல நாள்: மே 14, 15, 16, 22, 23, 24, 25, 31 ஜூன் 1, 2, 3, 6, 7, 11, 12.
கவனநாள்: மே 26, 27, 28 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 7, 9 நிறம்: சிவப்பு, வெள்ளை, பச்சை

பரிகாரம்: குல தெய்வ வழிபாடு நன்மை தரும். வெள்ளியன்று சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்யுங்கள். பெருமாளை வணங்கி வரவும்.

Advertisement
 
Advertisement