Advertisement

கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) முயற்சியில் வெற்றி!

பாச உணர்வு மிக்க கன்னி ராசி அன்பர்களே!

புதன் ஜுன் 3 வரையும், சுக்கிரன் ஜூன் 13 வரையும் சாதகமாக உள்ளனர். செவ்வாய், சனி, கேது ஆகியோராலும் நன்மையே. பக்தி எண்ணம் மேலோங்கும். எடுத்த முயற்சி வெற்றியாக முடியும். பொருளாதார வளம் சேரும். குடும்பத் தேவை பூர்த்தியாகும். வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் உண்டாகும். குடும்ப வாழ்வு சிறப்பாக அமையும். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும். பிள்ளைகளின் செயல்பாடு பெருமையளிக்கும். ஜூன் 13 வரை சுக்கிரன் சாதக இடத்தில் இருப்பதால் புத்தாடை அணிகலன்கள் வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.

தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அரசு வகையில் இருந்த சிரமம் மறையும்.

பணியாளர்களுக்கு சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். அதிகாரிகள் ஆதரவுடன் இருப்பர். போலீஸ், ராணுவ வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர்.
சிலருக்கு புதிய பதவி தேடி வரும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும்.

கலைஞர்கள் பின்தங்கிய நிலையில் இருந்து விடுபடுவர். பெண்கள் ஆதரவுடன் இருப்பர். ஜூன்13 க்கு பிறகு புகழ், பாராட்டு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.

அரசியல்வாதிகள் எதிர்பார்த்த நன்மை கிடைக்கப் பெறுவர். சிலர் அரசிடம் இருந்து விருது பெற வாய்ப்புண்டு.

மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்று நடந்தால் சிறப்பு அடையலாம்.
மேற்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு நெல், சோளம் போன்ற வகைகளில் அதிக மகசூல் கிடைக்கும். புதிதாக நிலம் வாங்க வாய்ப்புண்டு.

பெண்கள் குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று திரும்புவர்.
நல்ல நாள்: மே 17, 18, 22, 23, 29, 30, 31 ஜூன் 1, 6, 7, 8, 9, 10, 13, 14
கவன நாள்: ஜூன் 2, 3 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 3, 7 நிறம்: சிவப்பு, வெள்ளை

பரிகாரம்: வியாழனன்று தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். புதன் கிழமை குல தெய்வத்தை வணங்குங்கள். காளி வழிபாடு வெற்றியளிக்கும்.

Advertisement
 
Advertisement