Advertisement

விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) சொந்தக்காலில் நிற்பீங்க! பெண்களால் லாபம் பெறுவீங்க!

நினைத்ததை சாதிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே!

கடந்த மாதத்தை விட இந்த மாதம் நன்மைகள் அதிகரிக்கும். குறிப்பாக உங்களுக்கு இருந்த அலைச்சல் இனி இருக்காது. சூரியன் 9-ம் இடத்தில் இருந்து 10-ம் இடத்துக்கு வருவதால் படிப்படியாக செல்வாக்கு அதிகரிக்கும். அதோடு குரு, புதன் ஆகியோரால் நன்மைகளும் தொடரும். சுக்கிரன் ஆக. 26க்கு பின் நற்பலனைக் கொடுப்பார். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்கள் உதவிகரமாக இருப்பர். அவர்களால் பொருள் சேரும். குருவின் பலத்தால் பொருளாதார வளத்தில் எந்த குறையும் இருக்காது. உங்கள் முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் விலகும். குடும்பம் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை வளரும். வீட்டுக்கு தேவையான வசதி கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். ஆக. 26க்கு பிறகு பணவரவு இருக்கும். சொந்த பந்தங்கள் வருகை ஏற்படும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். செப். 3,4ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் ஆக. 19,20, செப்.15,16ல் அவர்களிடம் சற்று ஒதுங்கி இருக்கவும்.

தொழில், வணிகத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். லாபம் அதிகரிக்கும்.
பங்குதாரர்களிடையே ஒருமித்த கருத்து காரணமாக முன்னேற்றம் கூடுதலாகும்.
பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபம் தரும். போட்டியாளர்களின் இடையூறுகள் அவ்வப்போது வரும். குறிப்பாக செப். 5,6,7,10,11,12ல் அவர்கள் வகையில் கவனமாக இருந்து, உங்கள்
சமயோசித புத்தியைப் பயன்படுத்தினால் இடைஞ்சல்களை முறியடித்து விடுவீர்கள். ஆக. 23,24ல் நல்ல வருமானம் கிடைக்கும். சகவாசம் காரணமாக பணத்தை
விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர்.

பணியாளர்கள் சிறப்பான பலனை அடைவர். புதிய பதவி கிடைக்கும். மேல்
அதிகாரிகளின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும். சக பெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். செப்டம்பர் 1,2 சிறப்பான நாட்களாக அமையும். எதிலும் வெற்றி காணலாம். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். சனிபகவானால் வெளியூர் வாசம் இருக்கும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

கலைஞர்களுக்கு போட்டியாளர்கள் வகையில் இருந்து வந்த தொல்லை, அவப்பெயர் மறையும். ஆக.26க்கு பிறகு சுக்கிரனின் பலத்தால் முன்னேற்றம் காணலாம். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். உங்கள் வளர்ச்சிக்கு ஒரு பெண் பின்னணியாக இருப்பார்.

அரசியல்வாதிகள் கவுரவத்தோடு காணப்படுவர். பதவி கிடைக்க வாய்ப்புண்டு. நினைத்தது நிறைவேறும். சிலருக்கு மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் படிப்பில் சிறந்த முன்னேற்றம் காணலாம். போட்டிகளில் சிறந்து விளங்குவீர்கள். ஆசிரியர்களின் ஆலோசனை பயனுள்ளதாக அமையும்.

விவசாயிகள் நல்ல வருமானம் பெறுவர். நெல், கோதுமை, சோளம், கீரை வகைகள், காய்கறிகள் வகை பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும். புது சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேற சில காலம் பொறுத்திருங்கள். வழக்கு விவகாரம் சாதகமாக அமைய வாய்ப்புண்டு.

பெண்கள் உற்சாகமான உயர்ந்த நிலையை அடைவர். உங்களால் குடும்பத்தாருக்கு நற்பெயர் கிடைக்கும். வீட்டுச்செலவுக்கு போதுமான பணம் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். யாருடைய உதவியையும் நாடாமல் நீங்களேகாரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். ஆக. 17,18 செப். 13,14ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். கணவரால் நன்மை ஏற்படும். புத்தாடை, நகை வாங்கும் எண்ணம் நிறைவேறும். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரும். ஆகஸ்டு 25,26ல் குடும்பத்துடன் விருந்து, விழா, சுற்றுலா என சென்று வர வாய்ப்புண்டு. உடல்நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவ செலவு குறையும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் வீடு திரும்புவர்.

நல்ல நாள்: 2,3,4,5,6,11,12,13,14,17,18,19, 22,23,29,30,31 ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும். இந்த நாட்களில் சுபநிகழ்ச்சிகளை துவக்குதல், வெளியூர் பயணம் செய்தல் ஆகியவற்றைச் செய்யலாம்.

கவன நாள்: ஒரு ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம்தான் சந்திராஷ்டமம். அந்த வகையில் உங்கள் ராசிக்கு 8ம் இடமான மிதுனத்தில் சந்திரன் ஆக. 27,28ல் இருப்பார். இந்த காலத்தில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.

அதிர்ஷ்ட எண்: 1,7 நிறம்: மஞ்சள், செந்துõரம்

பரிகாரம்: துர்க்கை வழிபாடு உங்கள் நல்வாழ்வுக்கு துணை நிற்கும். தினமும் மாலையில் விளக்கேற்றி வழிபடுங்கள். வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்யுங்கள். முருகப்பெருமான் வழிபாடு நன்மை சேர்க்கும்.

Advertisement
 
Advertisement