Load Image
Advertisement

சிம்மம் : சித்திரை ராசி பலன்

மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு தெய்வ அருள் எப்போதும் இருக்கும். மற்றவர்களுக்கு வழிகாட்டும் பொறுப்புகள் தானாகவே உங்களை வந்துசேரும். பிறக்கும் சித்திரை மாதம் உங்கள் நிலையில் மாற்றங்களை உண்டாக்கும் மாதமாக இருக்கும். உங்கள் ராசிநாதன் சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் திடீரென சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். வியாபாரம், தொழிலை விரிவு செய்யும் முயற்சியை மேற்கொள்வீர்கள். வெளியூரில் புதிய கிளைகள் தொடங்குவீர்கள்; அதன் காரணமாக குடும்பத்தை விட்டு விலகி இருக்க வேண்டிய நிலை சிலருக்கு ஏற்படும். இதுவரையில் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் குருபகவான் உங்களுக்கு பாதுகாப்பாக இருந்து எல்லாவிதமான சங்கடங்களில் இருந்தும் விடுவிக்கும் நிலையில் மே1, 2024 முதல் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதால் பணியாளர்கள் கவனமாக செயல்படுவது அவசியம். வியாபாரம், தொழிலில் கூடுதல் கவனம் தேவை. புதிய முதலீடுகள் செய்யும் முன் பலமுறை யோசிக்க வேண்டும். சனிபகவான் ஏழாம் இடத்தில் சஞ்சரிப்பதால் வாழ்க்கைத் துணையுடன் சங்கடங்கள் ஏற்படும். நட்புகள் வட்டத்திலும் தேவையற்ற பிரச்னைகள் உருவாகும். கேதுபகவான் இரண்டாம் இடத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதன் மூலம் சங்கடங்கள் தீரும். சுக்கிரனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். பணவரவு திருப்தி தரும். புத பகவானின் சஞ்சார நிலையால் சிலருக்கு புதிய சொத்து சேரும். பெண்கள் இக்காலத்தில் கவனமாக செயல்படுவது நன்மையாகும். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதால் நெருக்கடி நீங்கும். நட்பு விஷயத்தில் எச்சரிக்கை அவசியம். வார்த்தைகளில் கவனம் தேவை. இல்லையென்றால் வார்த்தைகள் வழியே தேவையற்ற பிரச்னைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. விவசாயிகள் இக்காலத்தில் விளைச்சலில் கவனம் செலுத்துவதால் எதிர்பார்த்த வருமானம் வரும். அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பு இழுபறியாகும். இக்காலத்தில் ஒவ்வொரு செயலிலும் யோசித்து செயல்படுவது நன்மை தரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாணவர்கள் குலதெய்வ வழிபாட்டுடன் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும்.
சந்திராஷ்டமம்: மே 6,7

அதிர்ஷ்ட நாள்: ஏப்.16,19,25,28, மே 1, 10
பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்த சங்கடம் தீரும்.

பூரம்: களத்திரகாரகன், கலைக்காரகன், அதிர்ஷ்டகாரகனான சுக்கிரன், ஆன்ம காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு நினைத்ததை சாதிக்கும் ஆற்றல் எப்போதும் இருக்கும். எடுத்த காரியங்களை வெற்றியாக்கும் வல்லமை இருக்கும். பிறக்கும் சித்திரை மாதம் எதிர்பார்த்த நன்மைகளை தரும் மாதமாக இருக்கும். உங்கள் நட்சத்திர நாதனின் சஞ்சார நிலைகளாலும், ராசிநாதன் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் இதுவரையில் உங்களுக்கிருந்த நெருக்கடி விலகும். புதிய முயற்சி வெற்றி பெறும். வெளியூர் பயணம் லாபத்தில் முடியும் என்றாலும், பணியாளர்கள் பணியில் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது. சிலர் மேலதிகாரியின் கண்டிப்பிற்கு ஆளாக நேரலாம். மாதத்தின் பிற்பகுதியில் குரு பகவானும் இடம் மாறுவதால் நெருக்கடி அதிகரிக்கும். தேவையற்ற பிரச்னைகள் தோன்றும். அஷ்டம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத பிரச்னைகள் உங்களைத் தேடி வரும். கும்ப சனியால் குடும்பம், நண்பர்கள் மூலம் சங்கடங்கள் தோன்றும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். நன்றாக பழகி வந்தவர்களும் உங்களை விட்டு விலகிச் செல்வர். தொழில், வியாபாரத்தில் தடைகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் கூடுதல் கவனம் தேவை. பெண்களுக்கு மாதத்தின் முற்பகுதி சாதகமாகும். பிற்பகுதியில் பொருளாதார நெருக்கடி தோன்றும் என்றாலும், குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். உடலில் இருந்த சங்கடம் விலகும். நோய்கள் சிகிச்சையால் சரியாகும். அரசியல்வாதிகள் இக்காலத்தில் மற்றவர்களை அனுசரித்துச் செல்வதுடன் எதிர்மறை சிந்தனைக்கு இடம் தர வேண்டாம். விவசாயிகள் விவசாயப் பணியில் கவனம் செலுத்துவது நல்லது. கலைஞர்களுக்கு மாதத்தின் முற்பகுதி யோகமாக இருக்கும். மாணவர்களுக்கு மேற்படிப்பு கனவு நிறைவேறும்.
சந்திராஷ்டமம்: மே 7,8
அதிர்ஷ்ட நாள்: ஏப்.15,19,24,28, மே 1,6,10
பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட மனக்கவலை தீரும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

உத்திரம் 1 ம் பாதம்: பெருமைக்கும் பேரொளிக்கும் அனைத்து சக்திகளுக்கும் காரகனான சூரியனின் நட்சத்திரத்திலும் ராசியிலும் பிறந்த உங்களுக்கு செல்வாக்கு என்பது எப்போதும் இருக்கும். பிறக்கும் சித்திரை மாதத்தில் நட்சத்திர, ராசிநாதன் பாக்ய ஸ்தானத்தில் உச்சம் அடைவதால் கடந்த மாதங்களில் இருந்த நெருக்கடி விலக ஆரம்பிக்கும். தொழிலை விரிவு செய்வீர்கள். வியாபாரத்தில் போட்டியாளர்களால் ஏற்பட்ட சங்கடம் விலகும். பணியாளர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும். மாதத்தின் முற்பகுதியில் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். விருப்பங்கள் பூர்த்தியாகும் என்றாலும், பிற்பகுதியில் குருபகவான் ஜீவன ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாவதால் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் உண்டான நெருக்கடிகள் குருபகவானின் பார்வையால் விலகும். போட்டியாளர்களால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். இக்காலத்தில் குடும்பத்தினர், வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வது அவசியம். அரசியல்வாதிகளுக்கு வார்த்தைகளில் கவனம் தேவை. இதுவரையில் இருந்த செல்வாக்கில் மாதத்தின் பிற்பகுதியில் மாற்றம் ஏற்படும். பெண்கள் எந்த ஒரு செயலிலும் அவசரம் காட்டுவது சங்கடத்தை ஏற்படுத்தும். சப்தம ஸ்தான சனியால் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருப்பதால் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். புதிய முயற்சிகளில் யோசித்து அதன் பிறகே ஈடுபட வேண்டும். பணியாளர்கள் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகலாம். உடன் பணிபுரிபவர்கள் எதிராக மாறலாம் எச்சரிக்கை அவசியம். விவசாயிகளுக்கு விளைபொருளுக்கு எதிர்பார்த்த விலை கிடைப்பதில் இழுபறி ஏற்படும். மாணவர்கள் மேற்படிப்பிற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.
சந்திராஷ்டமம்: மே 8,9
அதிர்ஷ்ட நாள்: ஏப்.19,28, மே1,10
பரிகாரம்: அதிகாலையில் சூரியனை வழிபட விருப்பம் நிறைவேறும். வாழ்வு வளமாகும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement