கோவை: கோவையிலுள்ள முருகன் கோவில்களில், கந்த சஷ்டி விழா நேற்று துவங்கியது.சுக்கிரவார்பேட்டை பாலதண்டாயுதபாணிசுவாமி கோவிலில், கோட்டை ஈஸ்ரவன், பேட்டை ஈஸ்வரன், கோனியம்மன், மருதமலை சுப்ரமணியசுவாமி, காந்திபார்க் பாலமுருகன் கோவில், பேரூர்பட்டீசுவரர் கோவிலில் நேற்று கந்தசஷ்டி விழா துவங்கியது.சுக்கிரவார்பேட்டை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், அதிகாலை கந்தசஷ்டிக்கான யாகசாலை பூஜைகளை சிவாச்சாரியர்கள் துவக்கினர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து, கோவிலை சுற்றிலும் காப்பு கட்டும் வைபவம் மங்கல இசை முழங்க நடந்தது.தொடர்ந்து சிவாச்சாரியர்கள் கங்கணகாப்பு கட்டிக்கொண்டனர். சுவாமிக்கு விபூதிஅலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து அன்றாடம், நவ., 20 ம் தேதி வரை, யாகசாலை பூஜைகள் நடைபெறும். 20ம் தேதி மாலை 6:30 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறும். நவ.,21 அன்று காலை, 7:00 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு, திருக்கல்யாணம் நடக்கிறது. பக்தர்கள் நேற்று விரதத்தை துவக்கினர்.