பரமக்குடியில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது; ஏப்.22ல் வைகையில் இறங்குகிறார் கள்ளழகர்



பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது.

பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் ஆண்டு முழுவதும் மதுரை அழகர் கோயிலுக்கு இணையாக விழாக்கள் நடக்கிறது. இதன்படி சித்திரை திருவிழா இன்று காலை மூலவர் பரமஸ்வாமி, உற்சவர் சுந்தரராஜ பெருமாள், தோழர் பெருமாள், யாக மூர்த்தி மற்றும் பரிவாரங்களுக்கு காப்பு கட்டப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியார்கள் காப்பு கட்டிக்கொண்டு தீர்த்த குடங்களை சுமந்து யாகசாலையை நோக்கி சென்றனர். தொடர்ந்து யாகசாலை பூஜைகள் ஆரம்பித்து இரவு 7:00 மணிக்கு பெருமாள் ஏகாந்த சேவையில் ஆடி வீதியில் வலம் வந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க பெருமாளை தரிசனம் செய்தனர். இதேபோல் தினமும் மகாதீப ஆராதனை நடந்தது. ஏப்.,22 காலை 10:00 மணிக்கு சுந்தரராஜ பெருமாள், கருப்பண சுவாமிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. அன்று இரவு 12:00 மணிக்கு மேல் பெருமாள் கோடாரி கொண்டையிட்டு, தங்க நெல் மணி தோரணங்கள் சூடி, ஈட்டி, வளரி, கத்தி, தடி ஏந்தி கள்ளழகர் திருக்கோலத்தில் எழுந்தருளுவார். அப்போது அஷ்டாதச வாத்தியங்கள் முழங்க, ஏராளமான தீவெட்டிகள் பக்தர்கள் ஏந்தி நிற்க, வான வேடிக்கைகளுடன் அழகர் பூ பல்லக்கில் அமர்ந்து வைகை ஆற்றில் இறங்க உள்ளார். தொடர்ந்து ஏப்.23 காலை 8:00 மணிக்கு தல்லாகுளத்தில் இருந்து பல ஆயிரம் பக்தர்கள் மஞ்சள் நீரை பீய்ச்சி அடித்து குதிரை வாகனத்தில் வரும் கள்ளழகரை வரவேற்க உள்ளனர். இதனையொட்டி ஏப்.,23 மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்கின்றனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்