பரமக்குடியில் கோதண்டராமசாமி - சீதாலட்சுமி திருக்கல்யாணம்



பரமக்குடி: பரமக்குடி அனுமார் கோதண்ட ராமசாமி கோயிலில் ராமநவமி விழாவையொட்டி திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடந்தது.

பரமக்குடி நகராட்சி எதிரில் உள்ள அனுமார் கோதண்டராமசாமி கோயிலில், புளிய மரத்தில் மரமாகி புனிதபுளி ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இக்கோயிலில் ராமர், சீதை, லட்சுமணன் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். தொடர்ந்து ராமநவமி விழாவில் கொடியேற்றப்பட்டு, தினமும் ராமர் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறார். நேற்று காலை 10:00 மணிக்கு சங்கர மடத்திலிருந்து, பேரரசர் தசரத சக்ரவர்த்தியின் திருக்குமரன் நாராயண மூர்த்தி எனும் கோதண்ட ராமசுவாமி மாப்பிள்ளை திருக்கோலத்தில் வலம் வந்தார். மேலும் சுப்ரமணிய சுவாமி கோயிலில் இருந்து சீர்வரிசை கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கோயில் மகா மண்டபத்தில் மிதிலை பேரரசர் ஜனக மன்னன் மகள், மகாலட்சுமி என்ற சீதாலட்சுமி பிராட்டிக்கும், கோதண்டராம சுவாமிக்கும் 11:30 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. தொடர்ந்து மாலை மாற்றுதல், அம்மி மிதித்தல், அக்னியை வலம் வருதல் உள்ளிட்ட திருமண சடங்குகள் நடத்தப்பட்டது. அப்போது பக்தர்களுக்கு திருமாங்கல்ய கயறு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு ராமர், சீதை பட்டுப்பல்லக்கில் பட்டிணப்பிரவேசம் வந்தனர். விழாவில் அறங்காவலர் குழு தலைவர் இளையராஜா, உறுப்பினர்கள் மற்றும் சரக பொறுப்பாளர் சுந்தரேஸ்வரி உள்ளிட்ட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்