சித்திரை திருவிழாவில் கள்ளழகருக்கு தண்ணீர் பீய்ச்சியடிக்க கலெக்டர் விதித்த கட்டுப்பாடு உத்தரவுக்கு தடை



மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகருக்கு தண்ணீர் பீய்ச்சியடிக்க கட்டுப்பாடு விதித்த மாவட்ட கலெக்டரின் உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்தது.

மதுரை சித்திரை திருவிழாவின் போது கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வின்போது பாரம்பரிய தோல் பைகளை பயன்படுத்தி தண்ணீர் பீய்ச்ச வேண்டும், உயர் அழுத்த பம்புகளை பயன்படுத்தி தண்ணீர் தெளிக்க அனுமதிக்க கூடாது, பெண்கள் மீது தண்ணீர் தெளிக்க கூடாது, முன்பதிவு செய்தவர்களை மட்டுமே இதற்கு அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் தண்ணீர் பீய்ச்ச முன்பதிவு செய்ய மதுரை கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து தாக்கலான வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கள்ளழகரின் சிலை, ஆபரணங்கள், குருக்கள் மீது தண்ணீரை அதிக அழுத்தத்தில் பீய்ச்சுவதை தடுக்க வேண்டும். ஆனால் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதை எவ்வாறு தடுப்பது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரகதிரவன் ஆஜராகி, கள்ளழகரின் ஆசி பெரும் வகையிலேயே தண்ணீர் அனைவரின் மீதும் பீய்ச்சப்படுகிறது. மாவட்ட கலெக்டர் உத்தரவால் பக்தர்கள் மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என வாதிட்டார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள், மாவட்ட கலெக்டரின் இந்த உத்தரவால், தற்போது வரை 7 பேர் மட்டுமே தண்ணீர் பீய்ச்ச அனுமதி பெற்றுள்ளனர். இது பாரம்பரிய நடைமுறையை பாதிப்பதோடு, பக்தர்களின் மனதையும் புண்படுத்தும் என கருதுவதாக கூறி மாவட்ட கலெக்டர் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்