சாத்துார் சிவன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை



சாத்துார்; சாத்துார் சிவன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சிதம்பரேஸ்வரர் கோயில் என சாத்துார் பகுதி மக்களால் அழைக்கப்படும் சிவன் கோயில் தெப்பக்குளம் 600 ஆண்டுகள் பழமையானது பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் இந்தக் கோயிலும் தெப்பக்குளமும் மிகவும் பழமையானவை. தெப்பத்திற்கு மரிய ஊரணியிலிருந்தும் வேண்டாங் குளம் கண்மாயிலிருந்தும் தண்ணீர் வரும் கால்வாய்கள் இருந்தன. காலப்போக்கில் நீர் வரத்து கால்வாய்கள் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடங்கள் கட்டப்பட்டதால் தெப்பத்திற்கு தண்ணீர் வரும் பாதைகள் அடைபட்டன. கடந்த ஆட்சி காலத்தில் பிள்ளையார் கோவில் தெரு நகைக்கடை பஜார் தெரு, பெருமாள் கோயில் மாடவீதி பகுதிகளில் பெய்து வரும் மழைநீர் ஒருங்கிணைக்கப்பட்டு தெப்பத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதனால் சிறிய மழை பெய்தாலும் தெப்பத்திற்கு தண்ணீர் வரும் நிலை உருவானது. தற்போது தெப்பம் தொடர்ந்து பராமரிப்பு செய்யப்படாததால் தண்ணீர் முழுவதும் பாசி படர்ந்தும் பக்கவாட்டு சுவர்களில் செடிகள் முளைத்தும் படிகளில் புற்கள்கள் முளைத்தும் காணப்படுகின்றன. இதனால் சிவன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த மன வேதனை அடைகின்றனர். அரச மரங்கள் தெப்பத்தின் சுவற்றில் வளர்ந்து வருவதால் தெப்பத்தின் சுற்று சுவர் இடிந்து விழும் நிலை உள்ளது. சாத்துாரின் புராதானமான அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் சிவன் கோயில் தெப்பக்குளத்தை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிப்பதன் மூலம் சாத்துார் நகர் அழகு பெறும் மேலும் பக்தர்களின் மனமும் குளிரும் எனவே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெப்பக்குளத்தை நேரில் பார்வையிட்டு உரிய முறையில் பராமரித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்