சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வேல் வைத்து வழிபாடு; மக்களுக்கு மன நிம்மதியுடனும், மகிழ்ச்சி கிடைக்கும்!



திருப்பூர்: சிவன்மலை ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோவில், ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில், ஐம்பொன்னால் செய்யப்பட்ட வேல் வைத்து வழிபாடு நடக்கிறது.

திருப்பூர் மாவட்டம், சிவன்மலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. கோவிலில் உள்ள ஆண்டவர் உத்தரவு பெட்டியில், முருகப் பெருமான் பக்தர் கனவில் தோன்றி, குறிப்பிடும் பொருளை வைத்து வழிபடுவது வழக்கம். தாராபுரத்தைச் சேர்ந்த சபாபதி, 48, என்பவர் கனவில் தோன்றி குறிப்பிட்டவாறு, நேற்று உத்தரவுப் பெட்டியில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட வேல் வைத்து பூஜை நடந்தது. இதற்கு முன் கடந்த பிப்., 9ம் தேதி முதல் நிறைநாழி நெல் வைத்து பூஜை நடந்தது. கோவில் சிவாச்சார்யார்கள் கூறியதாவது:ஆண்டவர் உத்தரவு பெற்ற பின் வைக்கப்படும் பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கம் ஏற்படுத்தும். தற்போது முருகப் பெருமானின் ஆயுதமான வேல் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டிலும் ஒரு முறை இது போல் வேல் வைத்து வழிபாடு நடந்தது.வேல் என்பது ஞானத்தை குறிப்பதாக உள்ளது. இது இறைவன் தன் பக்தர்களை தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பதாகவும் உள்ளது. மக்கள் மத்தியில் அஞ்ஞானம் மறைந்து மெய்ஞ்ஞானம் ஏற்படும் என்பதையும் இது குறிக்கலாம். மக்கள் மன நிம்மதியுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்வர் என்ற குறிப்பை உணர்த்துவதாகவும் இருக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்