பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் திருவிழா பூமிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன்



பொள்ளாச்சி; பொள்ளாச்சி, போடிபாளையம் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று பக்தர்கள் அக்னி குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பொள்ளாச்சியை அருகே , போடிபாளையம் குளத்துாரில் உள்ள, பத்ரகாளியம்மன் கோவில் பூமிதி திருவிழா கடந்த, 8ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, பூவோடு எடுத்து வருதல், அன்னதானம், புலி வேடம் அணிந்து ஆட்டுகிடா எடுத்தல், வாண வேடிக்கை , பல்வேறு கோவில்களில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நேற்று நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு பூக்குண்டம் திறக்கப்பட்டது. சிங்க வாகனத்தில் அம்மன் திருவீதியுலா வந்தபின், அக்னி குண்டம் வளர்க்கப்பட்டது. நேற்று காலை, முதலில் மல்லிகை பூ உருண்டை , குண்டத்தில் உருட்டி விட்டனர். அதன்பின், 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். காலை 9:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 4:00 மணிக்கு மாவிளக்கு வழிபாடு நடந்தது. இன்று, இரட்டைக்கிடா வெட்டி சக்தி கும்பம் எடுத்தல் நிகழ்ச்சியும், நாளை மகா அபிஷேக ஆராதனையும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்