சின்னாளபட்டியில் சித்திரை திருவிழா; சுவாமி உலா



சின்னாளபட்டி; சின்னாளபட்டியில் மேட்டுப்பட்டி சுந்தர்ராஜ பெருமாள், ராம அழகர் கோயில்களில், சித்திரைத் திருவிழா நடக்கிறது. கொடியேற்றத்துடன் துவங்கி, தினமும் அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், ஏப். 21ல் நடந்தது. மேட்டுப்பட்டி சுந்தரராஜ பெருமாள் குடகனாற்றில் இறங்குதல் ஏப். 23ல் நடந்தது. ராம அழகர் கோயில் சித்திரை திருவிழாவில், திருக்கல்யாணம் வெள்ளியங்கிரி சஞ்சீவி நிலையில் இறங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இவற்றைத் தொடர்ந்து தினமும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், மண்டகப்படிகளில் எழுந்தருளல் நடக்கிறது. மோகினி அவதாரம் எடுத்தல், பூ பல்லக்கு ஊர்வலம் மற்றும் புட்டு திருவிழா ஆகிய நிகழ்வுகள் நடக்க உள்ளது.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்