நாளை குருப்பெயர்ச்சி விழா கோவில்களில் சிறப்பு பூஜை



திருப்பூர்:குருபெயர்ச்சியை முன்னிட்டு, திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நாளை, (மே 1 ம் தேதி) சிறப்பு யாகபூஜை நடைபெற உள்ளது.

நவகிரஹங்களில் சுப பலன்களை அருளும் குருபகவான், ஒவ்வொரு ராசியிலும், ஓராண்டு காலம் சஞ்சாரம் செய்கிறார். குரு சஞ்சாரம் செய்யும் வீடுகளை காட்டிலும், 5, 7, 9ம் பார்வை பெறும் ராசிகள் அதிக பயன்பெறுகின்றன. கடந்த ஓராண்டாக மேஷ ராசியில் இருந்து வரும் குருபகவான், நாளை ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். நாளை மாலை, 5:19 மணிக்கு, குரு பெயர்ச்சி நடக்கிறது. குருபெயர்ச்சியை முன்னிட்டு, திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் சிறப்பு யாகபூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீவிக்னேஷ்வரபூஜை, புண்யாகம், குருபெயர்ச்சி சிறப்பு யாகம் நடைபெறும். குருபகவானுக்கு அபிேஷகம், அலங்கார பூஜைகள், சிறப்பு பரிகார அர்ச்சனைகள் நடைபெற உள்ளது. அனைத்து ராசியினரும், கோவிலின் முன்பதிவு செய்து, பரிகார அர்ச்சனைகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், அலகுமலை கைலாசநாதர் கோவில், பல்லடம் - சித்தம்பலம் நவகிரஹகோட்டை உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள சிவாலயங்களில், குருபெயர்ச்சி ேஹாமம் மற்றும் வழிபாடுகள் நடைபெறுகின்றன.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்