குரு பெயர்ச்சியை தொடர்ந்து இன்றும் சிவாலயங்களில் அலைமோதும் பக்தர்கள்



விழுப்புரம்,: விழுப்புரத்தில் உள்ள சிவாலயங்களில் குரு பெயர்ச்சியை யொட்டி குரு பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

குரு பகவான் மேஷம் ராசியிலிருந்து ரிஷபம் ராசிக்கு பெயர்ச்சியாவதை யொட்டி, விழுப்புரத்தில் உள்ள சிவாலயங்களில் நேற்று குரு பெயர்ச்சி பூஜை நடைபெற்றது. விழுப்புரம் பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் நேற்று மாலை 5.19 மணிக்கு குருபகவான் ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாவதை யொட்டி, குரு தட்சணாமூர்த்திக்கும், நவக்கிரக குரு பகவானுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. குரு தட்சணாமூர்த்தி சுவாமி தங்கக்கவசம் சாற்றப்பட்டு பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, தங்களின் ராசிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதே போல், கீழ்பெரும்பாக்கம் பசுபதீஸ்வரர் கோவில், மகாராஜபுரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், பழைய பஸ் நிலையம் எதிரேவுள்ள ஆதிவாலீஸ்வரர் கோவில்களில் நடந்த குரு பெயர்ச்சி சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குரு பகவானை தரிசனம் செய்தனர். குரு பெயர்ச்சியை தொடர்ந்து இன்று வியாழக்கிழமையை முன்னிட்டு இன்றும் அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்