ஆழ்வார்திருநகரி கோவிலுக்கு ஜீயர் வழங்கிய புதிய பல்லக்கு



துாத்துக்குடி: நவதிருப்பதி கோவில்களில் ஒன்பதாவது கோவில், துாத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோவில். கோவிலின் பல்லக்கு பழுதான நிலையில் இருந்தது. இந்நிலையில், திருக்குறுங்குடி ராமானுஜ ஜீயர் சுவாமிகள், நான்கு லட்சம் ரூபாய் செலவில் புதிய பல்லக்கு தயார் செய்து ஆதிநாதர் ஆழ்வார் எழுந்தருள திருக்கோவிலுக்கு நேற்று சமர்ப்பித்தார். முன்னதாக 6.30 மணிக்கு அர்ச்சகர் கண்ணன் பல்லக்கிற்கு சிறப்பு பூஜைகள் செய்தார். ஆழ்வார்திருநகரி திருக்குறுங்குடி மடத்தில் இருந்து 7:00 மணிக்கு புதிய தங்க பல்லக்கு புறப்பட்டு வடக்கு ரத வீதி சுற்றி, சன்னிதி தெரு வழியாக எழுந்தருளி, 7.30 மணிக்கு கோவிலில் சமர்ப்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், திருக்குறுங்குடி ஜீயர் சுவாமிகள், மடத்தின் பவர் ஏஜன்ட் பரமசிவன், ஸ்ரீ காரியம் நம்பி, நிர்வாக அதிகாரி சதீஷ், தக்கார் ராமானுஜம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்