வட குருஸ்தலம்; பாடி, திருவல்லீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை



மேஷ ராசி கிருத்திகை முதல் பாதத்தில் இருந்து, ரிஷப ராசி கிருத்திகை இரண்டாம் பாதத்திற்கு, நேற்று மாலை 5:30 மணிக்கு குரு பெயர்ச்சியானார். மேஷம், கன்னி, விருச்சிகம், மகரம் ஆகிய நான்கு ராசிக்கும், இந்தாண்டு சிறப்பாக இருக்கும். ரிஷபம், மிதுனம், கும்பம், மீனம், துலாம், தனுசு, சிம்மம், கடகம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என, ஜோதிடர்கள் கூறுகின்றனர். குரு பெயர்ச்சியை முன்னிட்டு, சென்னையில் குரு தலமாக விளங்கும் பாடி, திருவல்லீஸ்வரர் கோவிலில் நேற்றும் இன்றும் லட்சார்ச்சனை நடத்தப்படுகிறது. இன்று காலை 8:00 மணி முதல் நண்பகல் 12:00 மணிவரை மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணிவரை குருபரிஹார ஹோமம் நடக்கிறது.

வட குருஸ்தலம்: திருவொற்றியூர், தேரடி பகுதியில் பழமையான மஹா தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. வழக்கமாக, தெற்கு முகமாக எழுந்தருள வேண்டிய மூலவர், இக்கோவிலில் வடக்கு நோக்கி எழுந்தருளியிருப்பார். அதன் காரணமாக, இக்கோவிலை வடகுருஸ்தலம் என்றழைப்பர். பத்து அடி உயரத்தில் யோக நிலையில் காட்சியளிக்கும் தட்சிணாமூர்த்தியை தரிசிக்க, தினம் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் திரள்வர். இந்நிலையில், குரு பெயர்ச்சியை யொட்டி, நேற்று காலை 9:00 - 12:00 மணி வரை லட்சார்ச்சனை நடந்தது. பகல் 2:30 மணி முதல் மாலை 5:19 மணி வரை, கணபதி ஹோமம், குருபெயர்ச்சி பரிகார ஹோமம், விசேஷ அபிஷேகம், மஹா தீபாரதனை நடைபெற்றது. குரு பெயர்ச்சியை முன்னிட்டு, வடகுருஸ்தலத்தில் வீற்றிருக்கும் யோக தட்சிணாமூர்த்தியை தரிசிக்க, நேற்று காலை முதலே, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, காலை, 9:00 - 12:00 மணி வரை,மாலை 5:30 - 8:00 மணி வரை லட்சார்ச்சனை நடைபெற்றது. நாளை காலை, 10:00 - 12:30 மணி வரை, ருத்ராபிஷேகம் நடைபெறுகிறது. மாலை, 5:30 - 8:00 மணி வரை, லட்சார்ச்சனை நிகழ்வுடன், குருபெயர்ச்சி விழா நிறைவுறும்.

- நமது நிருபர் குழு -

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்