போடி பத்திரகாளியம்மன் கோயிலில் காவடி, பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்



போடி; போடி அருகே பத்திரகாளிபுரம் பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி, காவடி, பால்குடம் எடுத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வந்தனர்.

தேர்தல் மட்டுமின்றி எப்போதுமே கட்சி கொடி, போஸ்டர்கள் ஒட்டாமல் தடை செய்யப்பட்ட முன்மாதிரி கிராமமாக போடி அருகே பத்திரகாளிபுரம் அமைந்து உள்ளது. இங்கு ஆண்டு தோறும் சித்திரை திருவிழா 5 நாட்கள் நடைபெறும். தேனி மாவட்ட மக்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதியில் இருந்து இங்கு வந்து பத்திரகாளிம்மனை தரிசித்து செல்வர். காவடி, தீச்சட்டி, பால்குடம், முளைப்பாரி எடுத்து மேளதாளத்துடன் நேர்த்தி கடனை செலுத்து வருகின்றனர். பலர் உருண்டு கொடுப்பதோடு, அலகு குத்தி வருதல், மாவிளக்கு, பொங்கல் வைத்து கிடா வெட்டி தங்களது நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் தரிசனம் பெற்றனர்.

* போடி அருகே விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தீச்சட்டி, காவடி, பால்குடம், முளைப்பாரி எடுத்து நேர்த்தி கடனை செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் தரிசனம் பெற்றனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்