ராமேஸ்வரம் கோயில் வீதியில் ரூ. 14 லட்சத்தில் நிழல்தரும் பந்தல்



ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தெற்கு ரத வீதியில் ரூ. 14 லட்சம் செலவில் நிழல் தரும் பந்தல் அமைக்கும் பணி நடக்கிறது.

ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை புனித நீராடி விட்டு சுவாமி தரிசனம் செய்ய தெற்கு ரத வீதி வழியாக கோயிலுக்குள் செல்கின்றனர். இதில் தெற்கு ரதவீதியில் நிழல் தரும் பந்தல் இல்லாததால் பக்தர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் ஓடோடி சென்று அவதிப்படுகின்றனர். மேலும் விழா மற்றும் விடுமுறை நாள்களில் புனித நீராட பக்தர்கள் நீண்ட வரிசையில் சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருக்கும் அவல நிலை உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் கோயில் நிர்வாகம் ஆன்மிக நன்கொடையாளர் மூலம் ரூ.14 லட்சத்தில் கிழக்கு ரத வீதி முதல் தெற்கு ரதவீதி வரை நிரந்தரமாக நிழல் தரும் பந்தல் அமைக்கும் பணி நடக்கிறது.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்