மழை வேண்டி மேளதாளத்துடன் கழுதைகளுக்கு திருமணம்



அன்னூர்; கோவை அருகே மழை பெய்ய வேண்டி, ஐந்து கிராம மக்கள் கூடி கழுதைகளுக்கு, மேளதாளத்துடன் திருமணம் செய்து வைத்தனர்.

கோவை மாவட்டம், அன்னூரின் வடக்கு பகுதியில், கடந்த நான்கு மாதங்களாக மழை பெய்யவில்லை. இதனால் லக்கே பாளையம், கோவில் பாளையம், நாச்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குளம், குட்டைகள் வறண்டு போயின. நிலத்தடி நீர் மட்டம் குறைந்தது. மேய்ச்சலுக்கு கூட புற்கள் இல்லாமல் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் தவிக்கின்றன. இதையடுத்து ஐந்து கிராம மக்கள் ஊர் கூட்டம் நடத்தினர். இதில் மழை பெய்ய வேண்டி, கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி ஈரோடு மாவட்டம், நல்லூரில் இருந்து கழுதைகள் கொண்டு வரப்பட்டன. இதில் ஆண் கழுதை கோவில் பாளையம் விநாயகர் கோவிலில் இருந்து சீர்வரிசை உடன் லக்கேபாளையத்தில் உள்ள சுப்பிரமணியர் கோவிலுக்கு மேளதாளத்துடன் அழைத்து வரப்பட்டது. கழுதைகளுக்கு பட்டு வேட்டி, பட்டு சேலை, வளையல்கள் அணிவித்து, ரிப்பன் கட்டி, கவரிங் நகைகளால் அலங்கரிக்கப்பட்டன, பின்னர் மேளதாளம் வாசிக்க, கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பங்கேற்ற மக்களுக்கு விருந்து வழங்கப்பட்டது. பலரும் திருமணத்தில் மொய் பணம் எழுதினர். இதுகுறித்து ஊர் பெரியவர்கள் கூறுகையில், கடந்த 1987ல் ஒருமுறை கடும் வறட்சி ஏற்பட்டபோது இதே போல் திருமணம் செய்து வைத்தோம். மழை பெய்தது. 2019ல் திருமணம் செய்து வைத்தோம் அப்போதும் மழை பெய்தது. தற்போது மூன்றாவது முறையாக இந்த திருமணம் செய்து வைத்துள்ளோம், என்றனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்