பூஜாரிகள் நல சங்கம் சார்பில் ஆலய வழிபாட்டு பயிற்சி துவக்கம்



சூலூர்; கோவில் பூஜாரிகள் நல சங்கம் சார்பில், ஆலய வழிபாட்டு பயிற்சி முகாம் அரசூரில் துவங்கியது.

கோவில் பூஜாரிகள் நல சங்கத்தின் சார்பில், 11 வது ஆலய வழிபாட்டு பயிற்சி முகாம் அரசூர் தங்கநாயகி அம்மன் கோவிலில் நேற்று துவங்கியது. 17 பெண்கள் உட்பட, 120 பேர் பங்கேற்றனர். வரும், 17 ம்தேதி வரை நடக்க உள்ள முகாமில், விநாயகர், முருகன், சிவன்,விஷ்ணு, அம்மன்,ஆஞ்சநேயர் மற்றும் கிராம தேவதைகளுக்கான வழிபாட்டு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முகாமில், சங்கத்தின் மாநில தலைவர் வாசு தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் மனோன்மணி கோவிந்தராஜ் துவக்கி வைத்தார். மாநில பொருளாளர் சுந்தரம், செயலாளர் சங்கர், புருஷோத்தமன், மாவட்ட தலைவர் மணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வெங்கடேஸ்வர சுவாமிகள் பயிற்சி அளித்தார். மாநில தலைவர் வாசு கூறுகையில்," வழிபாடு மற்றும் அலங்கார பயிற்சிகள் முகாமில் வழங்கப்படுகிறது. வரும், மே, 17 ந்தேதி கோவை மாவட்ட கோவில் பூஜாரிகள் நல சங்க மாநாடு நடக்க உள்ளது. அன்று பயிற்சி முடித்தவர்களுகக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்," என்றார்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்