திருமலை திருப்பதியில் அயோத்தியாகண்டம் அகண்ட பாராயணத்துடன் சப்தகிரகம்



திருப்பதி;  திருமலையில் உள்ள நாதநீராஜனம் தலத்தில் உலக நன்மைக்காக  பெருமாளை வேண்டி இன்று காலை அயோத்தியாகண்ட அகண்ட பாராயணம் நடைபெற்றது. அயோத்திகாண்டத்தின் 35 முதல் 39 வது சர்கம் வரை ஐந்து சர்கங்களில் மொத்தம் 164 ஸ்லோகங்கள், யோகவாசிஷ்டம் மற்றும் தன்வந்திரி மஹாமந்திரத்தின் 25 ஸ்லோகங்கள் என மொத்தம் 189 ஸ்லோகங்கள் கூறப்பட்டன. தர்மகிரி வேதபாடசாலை அறிஞர்கள் டாக்டர் ராமானுஜாச்சாரியார், ஸ்ரீஆனந்தா, டாக்டர் மாருதி ஆகியோர் ஸ்லோகம் வாசித்தனர். அகண்ட பாராயணத்தில் தர்மகிரி வேத பள்ளி ஆசிரியர்கள், எஸ்.வி.வேத பல்கலைகழக ஆசிரியர்கள், எஸ்.வி., உயர்கல்வி பல்கலை வேத ஓதுபவர்கள், தேசிய சமஸ்கிருத பல்கலை அறிவியல் அறிஞர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், அன்னமாச்சார்யா திட்ட கலைஞர்கள் ராஜேஷ் குழுவினர் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் "தேவதல கச்சின தேவவிடாது..." என்ற கீர்த்தனையையும், இறுதியில் "ராம ராம ஸ்ரீ ரகுராம..." என்ற பாடலையும் பாடினர்.
 இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்