கொடிக்களம் செல்லியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்



திட்டக்குடி, திட்டக்குடி அடுத்த கொடிக்களம் கிராமத்தில் நடந்த செல்லியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

திட்டக்குடி அடுத்த கொடிக்களம் கிராமத்தில் செல்வ விநாயகர், செல்லியம்மன், ராயமுனியப்பர், மதுரைவீரன், பாலாம்பிகை, மஹா மாரியம்மன், ஐயனார், திரெளபதி அம்மன் சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் மே.5ம் தேதி நடத்த கிராம முக்கியஸ்தர்களால் முடிவெடுக்கப்பட்டது. அதை முன்னிட்டு கும்பாபிஷேக விழா மே.3ம் தேதி, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜைகளுடன் துவங்கியது. மே.4ம் தேதி, இரண்டாம் காலம் மற்றும் மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் நடந்தது. மே.5ம் தேதி காலை நான்காம் கால யாக சாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து யாக சாலையிலிருந்து கடம் புறப்பாடு நடந்து, கோவில் கலசங்களில் புனிதநீர் தெளிக்கப்பட்டு, செல்வ விநாயகர், மாரியம்மன், ஐயனார், திரெளபதி அம்மன் மற்றும் செல்லியம்மன், ராயமுனீஸ்வரர், மதுரைவீரன் சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்