சதுரகிரியில் அமாவாசை வழிபாடு; ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்



வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

அதிகாலை முதல் பல்வேறு வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை மலை அடிவார தோப்புகளில் குவிந்திருந்தனர். வெயிலின் தாக்கத்தை முன்னிட்டு தங்களை முன்கூட்டியே மழையேற அனுமதிக்க முடியும் என வனத்துறையினரிடம் பக்தர்கள் கூறினர். இதனையடுத்து காலை 6:00 மணி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் எளிதில் தீப்பற்றும் பொருட்களைக் கொண்டு செல்கின்றனரா என வனத்துறையினர் சோதனை செய்தனர். மதியம் 12:00 மணி வரை 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் மலையேறிய நிலையில் வனத்துறை கேட் மூடப்பட்டது. ஓடைகளில் நீர் வரத்து இல்லாத நிலையிலும், வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையிலும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் மலையேறி, மதியம் 12:00 மணிக்கு நடந்த அமாவாசை சிறப்பு வழிபாடு பூஜைகளை தரிசனம் செய்தனர். கோயிலில் சுந்தர மகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சன்னதியில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி , செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் செய்திருந்தனர். வத்திராயிருப்பு, சாப்டூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் மலை அடிவாரம் முதல் கோயில் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்