மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் அமாவாசை பூஜை



கோவை; அமாவாசை தினத்தையொட்டி மதுக்கரை மலை மேல் அமைந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவில் மூலவருக்கு அபிஷேகம் நடந்தது.

மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்த போது இந்த மலையில் எழுந்தருளியுள்ள சுயம்புலிங்கத்தை தர்மர் வழிபட்டதாகவும், தர்மன் சிவ வழிபாடு செய்த போது, பீமன் மலையின் அடிவாரத்தில் இருந்து காத்ததாகவும் இக்கோயில் தல புராணம் கூறுகிறது. இக்கோயிலில் தர்மலிங்கேஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். இங்கு அமாவாசை, கிருத்திகை, பிரதோஷம் ஆகிய நாட்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்படுகிறது. இன்று சித்திரை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று காத்திருந்து தரிசனம் செய்தனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்