உலக நன்மை வேண்டி பிரத்யங்கிரா தேவிக்கு மிளகாய் யாகம்



கோபால்பட்டி, சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான்பாறை ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் சித்திரை மாத அமாவாசையான நேற்று நடந்த பிரத்தியங்கிரா தேவி மிளகாய் யாகத்தை சபையின் நிர்வாகி திரு வேங்கட ஜோதி பட்டாச்சாரியார் செய்து வைத்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதையொட்டி நேற்று காலை முதல் சபையில் வளர்க்கப்படும் 50க்கும் மேற்பட்ட பல்வேறு வகை நாட்டு மாடுகளுக்கு பக்தர்கள் அகத்திக்கீரை உணவுகள் வழங்கி கோ பூஜை நடந்தது.தொடர்ந்து மாலையில் மடத்தில் உள்ள யாகசாலையில் நரசிம்மர் கலசங்களுக்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பிரத்தியங்கிரா தேவி அம்மன் பூக்கள் அலங்காரத்தில் எழுந்தருள சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து சபையின் நிர்வாகி டாக்டர் திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் வேத மந்திரம் முழங்க யாகுண்டத்தில் மூட்டை மூட்டையாக மிளகாய் வத்தலை கொட்ட பிரத்தியங்கிரா தேவி யாகம் உலக நன்மை வேண்டி நடத்தப்பட்டது. இதில் மதுரை, தேனி, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை பனை ஓலையில் எழுதி யாக குண்டத்தில் போட்டு பூஜை செய்தனர். வெளிமாநில மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் இணையதளம் மூலமாக பூஜையில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்