ருத்ரபிரயாகை கார்த்திக் சுவாமி கோவிலில் மே 15ல் ஸ்கந்த மகா யாகம், வலம்புரி சங்குபூஜை



உத்தரகண்ட்;  உத்தராகண்டின் இமய மலையில் முருகனின் இருப்பிடமாக, பக்தர்கள் வழிபடும் முக்கிய தலமாக உள்ளது கார்த்திக் சுவாமி கோவில். உத்தரகண்ட் மாநிலம், ருத்திரபிரயாகை மாவட்டத்தில் கனக் சௌரி கிராமத்திற்கு அருகில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3050 மீட்டர் உயரத்தில் உச்சியில் அமைந்துள்ளது இந்த கார்த்திக் சுவாமி கோவில். ஸ்கந்த புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி கிரௌஞ்ச மலையில் பகவான் கார்த்திகேயன் தவமிருந்ததாக நம்பப்படுகிறது. இங்கு தென்னக முருகன் தலத்தில் செய்வதுபோல் 108 வலம்புரி சங்கு பூஜை, கலசஸ்தாபனம், வேள்வி ஆகியன நடைபெறும். அதன்படி வரும் மே 15ம் தேதி காலை 9:00 முதல் பகல் 12:00 வரை ஸ்கந்த மகா யாகம், 108 வலம்புரி சங்குபூஜை, அறுபடைமுருகன் ஆலய வஸ்திர பரிமாற்றம் நடைபெற உள்ளது.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்