நாகை முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா; யானை மீது புனித நீர் ஊர்வலம்



நாகையில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக யானை மீது புனித நீர் எடுத்து வரப்பட்டது. வெகு விமர்சையாக நடைபெற்ற புனித நீர் ஊர்வலத்தில், மேளதாளம் முழங்க, கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம் ஆடி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வரும் 15ம் தேதி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இதற்காக சப்தவிடங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற நாகை நீலாயதாட்சி அம்மன் கோவிலில் இருந்து இன்று புனித நீர் யானையில் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கங்கை, யமுனை, சிந்து, கோதாவரி, நர்மதை உள்ளிட்ட 9, புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் யானை மேல் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. இதில் நாதஸ்வர மேளக்கச்சேரி, ட்ரம்ஸ் இசையுடன், கரகாட்டம் மானாட்டம் மயிலாட்டம் ஒயிலாட்டம் சிலம்பாட்டம் கும்மியாட்டம் என களை கட்டியது. அப்போது முத்து மாரியம்மனுக்கு விரதம் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் மஞ்சளாடை அணிந்தவாறு முளைப்பாரி எடுத்தும், பால் குடம் சுமந்தும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக 5 கிலோமீட்டர் தூரம் உள்ள அக்கரைப்பேட்டை கோவில் வரை ஊர்வலமாக சென்றனர். புனித நீர் ஊர்வலத்தில், சிவன், பார்வதி, பச்சை காளி பவள காளி என மேளதாள வாத்தியங்களுக்கு ஏற்றவாறு வழியெங்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் ஆட்டம் போட்டும், பாட்டுப்பாடியும் கும்மியடித்தும்  சென்றனர். இதைப்போல் சிறுவர், சிறுமியர் சிலம்பாட்டம் ஆடி உற்சாகத்துடன் புனித நீர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். விழாவில் நாகை, காரைக்கால் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்