அகஸ்தீஷ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம் விமரிசை



சூணாம்பேடு; சூணாம்பேடு அடுத்த வில்லிப்பாக்கம் கிராமத்தில், பழமையான மூகாம்பிகை உடனுறை அகஸ்தீஷ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில், பிரதோஷம், சிவராத்திரி, ஆருத்ரா உள்ளிட்ட பல்வேறு உற்சவங்கள், விமரிசையாக நடத்தப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும், கார்த்திகை மாதம், 2வது சோம வாரம், திங்கட்கிழமை சங்காபிஷேகம் விமரிசையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டின் கார்த்திகை மாதத்தின் இரண்டாவது சோமவார திங்கட்கிழமையான இன்று சங்காபிஷேக விழா சிறப்பாக நடந்தது. இதில், 108 சங்குகளை வைத்து சிறப்பு யாகம் நடத்தி, சங்குகளில் இருந்த புனித நீரால், மூலவருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின், சிறப்பு அலங்காரத்தில் அகஸ்தீஷ்வரருக்கு தீப ஆராதனை காட்டப்பட்டது. இதில், வில்லிப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்