பழநி கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்



பழநி; பழநி கோயிலுக்கு விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருந்தது.


பழநி கோயிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு தரிசனம் செய்ய அதிக அளவில் பாதயாத்திரை பக்தர்கள் கோயிலுக்கு வருகை புரிந்தனர். வெளிமாநில, வெளியூர், உள்ளூர், பாதயாத்திரை பக்தர்கள் வருகை புரிந்தனர். ரோப்கார், வின்சில் கோயிலுக்கு செல்ல பல மணி நேரம் பக்தர்கள் காத்திருந்தனர். கோயிலில் பொது தரிசனம், கட்டண தரிசன வரிசையில் வெளிப்பிரகாரத்தை சுற்றி பக்தர்கள் காத்திருந்தனர். சாரல் மழை பெய்ததால் பக்தர்கள் அவதிப்பட்டனர். 2மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர். கிரிவீதியில் வாகனங்கள் அனுமதி இல்லாததால், பேட்டரி கார் மற்றும் பஸ் மூலம் இலவசமாக பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.அலைபேசி பாதுகாக்கும் மையங்களில் பல மணி நேரம் காத்திருந்தனர். பக்தர்கள் அதிகம் இருந்ததால் பேட்டரி கார், பஸ்காக கிரிவீதியில் காத்திருந்தனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்