திருப்புல்லாணி; அமாவாசை தினம் என்பது மிக முக்கியத்துவம் பெற்றதாகும். தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை சிறப்பு உடையது. இந்நிலையில் வரக்கூடிய ஜன.,29 அன்று தை அமாவாசையில் சேதுக்கரை சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் அருகே உள்ள கடற்கரையில் விமர்சையாக நடக்கிறது. தை மாதத்தில் சூரிய பகவான் மகர ராசியில் பிரவேசிக்கின்றார். அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் சங்கல்ப பூஜைகளை செய்வதற்காக ராமநாதபுரம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் புனித நீராடுவதற்காக சேதுக்கரை வருகின்றனர். இந்நிலையில் சேதுக்கரை ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் கழிப்பறை வசதி கடற்கரை ஓரத்தில் மின்வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.