வைத்தீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்



கோவை; வெள்ளலுார், சக்தி விநாயகர் நகரில் உள்ள சக்தி விநாயகர், தையல் நாயகி உடனமர் வைத்தீஸ்வரர் கோவில் ஏழாமாண்டு விழா நடந்தது. விழா முன்னிட்டு, காலை 8:30 மணிக்கு கோ பூஜை, மஹா யாகம், 108 சங்காபிஷேகம் நடந்தது. காலை 10.30 மணிக்கு, ஆடல் வல்லான் திருக்கயிலாய வாத்திய குழுவினரின் கைலாய இசை நிகழ்ச்சி நட்நதது. மாலையில் சீர் வரிசைபொருட்களை, பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர். இரவு 7:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இரவு அன்னதானத்துடன் திருக்கல்யாண விழா நிறைவடைந்தது. விழவுக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக கமிட்டியினர், மகளிர் வழிபாட்டுக்குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்