சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 75ம் ஆண்டு வர்தந்தி மகோத்ஸவ விழா நேற்று (மார்ச் 30) சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி சாரதா பீடத்தில் பல்வேறு சிறப்பு வழிபாடு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
ஏப்.,4ம் தேதி வரை நடைபெறும் விழாவில் இன்று அதிருத்ர மகாயாகம் துவங்கியது. தொடர்ந்து 75 லட்ச பஞ்சாக்ஷரி மஹாமந்திர ஜபம் சிறப்புடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் சஹஸ்ரசண்டி மஹாயாக சங்கல்பம், ஆயுத ஸ்ரீ சுக்த ஜபம், சரஸ்வதி மந்திர அனுஷ்டானம், தேவி மகாமந்திர ஜபம், அக்ஷர லக்ஷ ஸ்ரீ வித்யா ஜப அனுஷ்டானம் நடைபெற உள்ளது. இன்றைய வழிபாட்டில் முன்னதாக ஜகத்குரு ஸ்ரீ மஹாசன்னிதானம் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ சச்சிதானந்த சிவாபினவ நிருசிம்ம பாரதி மஹாஸ்வாமிஜியின் ஆராதனை நடைபெற்றது. இந்த மஹோத்ஸவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.