மானாமதுரை; மானாமதுரையில் மதுரை ராமேஸ்வரம் நான்கு வழி சாலை நடுவே தல்லாகுளம் தர்ம முனிஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலிலுக்கு மானாமதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சேவல்களை நேர்த்திக்கடனாக கொடுத்து வருகின்றனர். மேலும் ஏராளமானோர் ஆடு கோழிகளை பலியிட்டு அன்னதானமும் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் வருகிற 6-ம் தேதி வருஷாபிஷேக விழா நடைபெறுவதை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலில் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர்.இதையடுத்து தினந்தோறும் தர்ம முனீஸ்வரருக்கு அபிஷேக, ஆராதனைகள்,பூஜைகள் நடைபெற்று வருகின்ற நிலையில் வருஷாபிஷேக விழா அன்று மதியம் மானாமதுரை பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் சார்பாக கோயில் அருகே அன்னதானம் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை தர்ம முனிஸ்வரர் கோயில் பக்தர்கள் செய்து வருகின்றனர்.