வஞ்சிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலில் ரூ.99 லட்சத்தில் திருப்பணி துவக்கம்



பொன்னேரி; பொன்னேரி அடுத்த வஞ்சிவாக்கம் கிராமத்தில் உள்ள ஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில், 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அகத்தியர் வழிபட்ட, 163 தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.


இக்கோவிலில், லிங்க வடிவில் அகத்தீஸ்வரர், இடதுபுறம் விநாயகர், வலதுபுறம் ஐந்து முகம் கொண்ட முருகபெருமான் ஆகிய சன்னிதிகள் அமைந்துள்ளன. தெற்கில் ஆனந்தவல்லி தாயார் சன்னிதி, வெளி வளாகத்தில் சண்டிகேஸ்வரர், நவக்கிர சன்னிதிகள் உள்ளன. பழமை வாய்ந்த இக்கோவில் பாழடைந்து, சுவர்களில் மரங்கள் வளர்ந்தும், விரிசல்கள் ஏற்பட்டும் உள்ளன. இதனால், கோவில் இடிந்து விழும் நிலையில் இருந்தது. இது, பக்தர்கள் இடையே வேதனையை ஏற்படுத்தியது. 


இதுகுறித்து கடந்தாண்டு நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. கோவிலை புனரமைத்து தரவேண்டும் என பக்தர்கள், ஹிந்து அறநிலையத் துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். துறை சார்ந்த அதிகாரிகளை நேரில் சந்தித்து முறையிட்டு வந்தனர். இதன் பயனாக, தற்போது 99 லட்சம் ரூபாயில் கோவிலை புனரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து இன்று அகத்தீஸ்வரர், ஆனந்தவல்லி அம்பாள், விநயாகர், சண்முகர், வள்ளி தேவசேனா, சண்டிகேஸ்வர் மற்றும் பரிவார மூர்த்தி கற்சிலை விக்ரகங்களை அகற்றாமல், பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் துவங்கியது. கோவிலின் தற்போதைய அமைப்பில் மாற்றம் ஏதும் செய்யக்கூடாது எனவும், திருப்பணிகளை பாதியில் நிறுத்தக்கூடாது எனவும் கோவில் நிர்வாகத்திற்கும், பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்திற்கும் ஹிந்து ச அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது. சிதிலடைமந்து கிடந்த வஞ்சிவாக்கம் அகத்தீஸ்வர் கோவிலில் திருப்பணிகள் துவங்கப்பட்டிருப்பதால், பழமையான இக்கோவிலுக்கு விமோசனம் கிடைத்துள்ளது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்