மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ரூ.14 கோடியில் திருப்பணிகள்



மேட்டுப்பாளையம்; வனபத்ரகாளியம்மன் கோவிலில், 14 கோடி ரூபாய் செலவில், நடைபாதை மண்டபம், சுற்று பிரகார மண்டபம், முடி காணிக்கை மண்டபம், மதில் சுவர், என நான்கு திருப்பணிகள் நடைபெறுகின்றன.


கோவை மாவட்டத்தில் உள்ள கோவில்களில், மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆகும். இது ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவிலாகும். பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கைகள், கடைகளின் வாடகை ஆகியவற்றின் வாயிலாக ஆண்டுக்கு, 7 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. அதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யவும், கோவிலில் திருப்பணிகள் செய்யவும், கோவில் நிர்வாகம் முன் வந்துள்ளது. தற்போது கோவிலில் நடைபெறும் திருப்பணிகள் குறித்து, கோவில் செயல் அலுவலரும், உதவி கமிஷனருமான கைலாசமூர்த்தி கூறியதாவது: வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலானவர்கள் பவானி ஆற்றுக்கு சென்று கை,கால்களை சுத்தம் செய்தும், குளித்தும் வருகின்றனர். அவர்கள் வரும்போது வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்தனர். அதை போக்க நடைபாதை மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் கோவிலை சுற்றி சுற்று பிரகாரம் மண்டபம், முடி காணிக்கை மண்டபம், சுற்றிலும் மதில் சுவர் ஆகிய திருப்பணிகள், 14 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகின்றன.


இதுவரை, 60 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன. பக்தர்கள் நடைபாதை மண்டபம் முழுவதும் கட்டி முடித்து வெள்ளை அடிக்கப்பட்டுள்ளது. அதில் வர்ணங்கள் பூசும் பணிகள் விரைவில் துவங்கும். நான்கு திருப்பணிகளும், ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான, சுத்தமான குடிநீர்,கழிப்பிட வசதிகளும், வாகனங்கள் நிறுத்துவதற்கான இட வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு உதவி கமிஷனர் கூறினார்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்