மதுரை; சிருங்கேரி சாரதா பீடம் 36வது பீடாதிபதி பாரதி தீர்த்த மஹாசுவாமிகளின் 75வது திருநட்சத்திர விழா ஏப்.3 ல் கர்நாடக மாநில சிருங்கேரி மடம் உட்பட நாட்டின் அனைத்து சிருங்கேரி சாரதா பீடத்திலும் கொண்டாடப்படுகிறது. மதுரை பைபாஸ் ரோடு சிருங்கேரி சாரதா பீடத்தில் நேற்று காலை கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. ஏப்.2ம் தேதி வரை நடைபெறும் விழாவில் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது. ஏப்.3 ஆயுஷ் ஹோமம், மிருத்தி யுஞ்சய ஹோமம், ருத்ர ஹோமம் ஆகியவை நடக்கின்றன. ஏப்.4ம் தேதி காலை சிருங்கேரி மடத்தில் விஸ்வேஸ்வரருக்கு சிவ சஹஸ்ர நாம லட்சார்ச்சனை நடக்கிறது. இன்று நடைபெற்ற வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.