சிதம்பரம்; பின்னத்துார் அபிராமி அம்மன் கோவிலில் சித்திரை பெருவிழா நடந்தது. சிதம்பரம் அடுத்த பின்னத்துாரில் அமைந்துள்ள அபிராமி அம்பாள் கோவிலில், 48ம் ஆண்டு சித்திரை பெருவிழா கடந்த 13ம் தேதி துவங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தது. கடந்த 14ம் தேதி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடந்தது. அரசு வேம்பு திருக்கல்யாணம், ஊஞ்சல் உற்சவம், வள்ளி தெய் வானை சமேத முருகபெருமான் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து, வீதியுலா நடந்தது.