மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் சக்தி கரகம் ஊர்வலம்



செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு சக்தி கரகம் ஊர்வலம் நடந்தது.


விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று இரவு 11 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடத்து வருகிறது. இதில் மாசி மாதம் அமாவாசையன்று மாசி பெறுவிழா நடக்கும் போதும், சித்திரை மாதத்திலும் ஊஞ்சல் உற்சவம் நடப்பதில்லை. சித்திரை மாதம் சக்தி கரகம் வீதி உலா நடக்கும். நேற்று அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க காப்பு அலங்காரம் செய்தனர். இரவு 1 மணிக்கு அக்கினி குளத்தில் இருந்து புறப்பட்டு சக்தி கரகம் மற்றும் சாமி வீதி உலா நடந்தது. வீதி உலாவில் அங்காளம்மன், ஞானாம்பிகை உடனுறை காளத்தீஸ்வரர் அலங்காரத்தில் எழுந்தருளி அருள் பாலித்தார். மேல்மலையனுாரின் முக்கிய தெருக்கள் வழியாக அதிகாலையில் சக்தி கரகம் கோவிலை வந்தடைநத்தது. அங்கு மங்கள ஆரத்தியுடன் சக்தி கரகத்திற்கு பூசாரிகளும், பக்தர்களும் வரவேற்பளித்தனர், அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களை இயங்கினர். பள்ளி விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் மேல்மலையனுாரில் கடும் போக்குவரத்து நெரில் ஏற்பட்டது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்