மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயில் சித்திரை தேரோட்டம்



மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி  நடந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயில் சித்திரை திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.இதனைத் தொடர்ந்து தினம் தோறும் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். நேற்று ஆனந்தவல்லி, சோமநாதர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இன்று தேரோட்ட விழாவிற்காக அதிகாலை சோமநாதர் பிரியாவிடையுடன் பெரிய தேருக்கும், ஆனந்தவல்லி அம்மன் பெரிய தேருக்கு பின்னால் உள்ள சிறிய தேரிலும் எழுந்தருளினர். தேர்களுக்கு முன்பாக சிறிய தேரில் முருகன் வள்ளி,தெய்வானையுடன் எழுந்தருளினார். காலை 10:20 மணிக்கு  ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர்களை வடம் பிடித்து நான்கு ரத வீதிகளிலும் இழுத்து வந்தனர. தேர்கள் நிலையை அடைந்தவுடன் ஏராளமானோர் நேர்த்திக் கடனாக தேங்காய்களை உடைத்தனர். மேலும் ஏராளமான விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளைந்த காய்கறிகளையும் தேர்கள் மீது வீசினர். பின்னர் சுவாமிகளுக்கு தீபாராதனைகளும் பூஜைகளும் நடைபெற்றது. தேர்வலம் வரும்போது நான்கு ரத வீதிகளிலும் வலம் வரும் போது ஏராளமானோர் இலவசமாக மோர், குளிர்பானங்கள், மற்றும் பழங்களை வழங்கினர்.தேரோட்ட விழாவில் மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரோட்ட விழாவிற்கான பாதுகாப்பு பணியில் மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத், டி.எஸ்.பி., நிரேஷ் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் ஈடுபட்டனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்