பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்ஸவ விழாவில், குழலூதும் கண்ணனாக பெருமாள் அருள்பாலித்தார். கோயிலில் 223 வது வைகாசி பிரம்மோற்ஸவம் நடக்கிறது. நேற்று இரவு பெரிய திருவடி கருட வாகனத்தில் ராஜ மன்னராக வலம் வந்தார். இன்று காலை பல்லக்கில் குழலூதும் கண்ணன் மற்றும் அனுமார் வாகனத்தில் ராமபிரான் திருக்கோலத்தில் அருள்பாலித்தார். நாளை யானை வாகனத்திலும் 6ம் தேதி காலை 9:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபையினர் செய்துள்ளனர்.