ஆனி சஷ்டி திதியும், உத்திர நட்சத்திரமும் இணைந்த இந்த நாள் சிறப்பு வாய்ந்தது. இன்று அனைத்து சிவாலயங்களிலும் நடராஜருக்கு அபிஷேகம் நடக்கும். ஆனி வளர்பிறையில் வரும் சஷ்டிக்கு குமார சஷ்டி என்று பெயர். சிவாலயங்களில் நடராஜருக்கு நடத்தப்பெறும் அபிஷேக விழாக்களில் சிறப்பான விழாக்கள் இரண்டு. ஒன்று மார்கழி திருவாதிரை. மற்றொன்று ஆனி உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் திருமஞ்சனம். இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கும். சித்திரை திருவோணம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி ஆகிய நாட்களில் மாலைநேரத்தில் அபிஷேகம் நடத்தப்படும். பொன்னம்பலமான சி தம்பரத்தில், பத்துநாட்கள் நடைபெறுவது ஆனி உத்திரத்திருவிழா. ஆனிஉத்திர நட்சத்திரத்தன்று இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் அதிகாலையில் அபிஷேகம் நடக்கும். ஆனி சஷ்டி திதியும், உத்திர நட்சத்திரமும் இணைந்த இந்த நாள் சிறப்பு வாய்ந்தது. இன்று அனைத்து சிவாலயங்களிலும் நடராஜருக்கு அபிஷேகம் நடக்கும். இன்று நாமும் நடராஜர் அபிஷேகம் தரிசிப்போம்.. சிவனை சரணடைவோம்!
வளர்பிறை அல்லது தேய்பிறையின் ஆறாம் நாள் சஷ்டி திதி. ஆனி மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டிக்கு குமார சஷ்டி என்று பெயர். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது. சஷ்டி விரதமிருப்பவருக்கு குழந்தைப்பேறு உண்டாகும். இன்று காலை, மாலை கந்தசஷ்டி கவசம் படிப்பது எல்லா நன்மையும் தரும்.