முத்துப்பல்லக்கில் வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் வீதியுலா



வடமதுரை; வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவில் முத்துப்பல்லக்கில் சுவாமி வீதி உலா வந்தார். இக்கோயில் விழா ஆக.1ல் கொடியேற்றத்துடன் துவங்க 13 நாளாக நடந்த நிலையில் நாளை இரவுடன் விழா நிறைவடைகிறது. நாள்தோறும் இரவு மண்டகபடிதாரர் சிறப்பு வழிபாடு, பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக ஆக.7 ல் திருக்கல்யாணம், 9ல் தேரோட்டம் நடந்தது. பெருமாள் பல்லக்கில் பக்தர்களுக்கு தரிசனம் வழங்கும் வசந்தம் முத்துப்பல்லக்கு நேற்று இரவு நடந்தது. சன்னதியில் இருந்து சிறப்பு அலங்காரத்துடன் புறப்பட்ட பெருமாளை நான்கு ரத வீதிகளிலும் காத்திருந்த பக்தர்கள் அபிஷேகம், தீபாராதனை செய்து வழிப்பட்டனர். பின்னர் அதிகாலையில் சுவாமி சன்னதி திரும்பினார்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்