கண்டியூர் பிரம்ம சிரக்கண்டிஸ்வரரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்



தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம்  கண்டியூரில் பிரம்ம சிரக்கண்டிஸ்வரரர் கோவில் உள்ளது. பழமையான இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று, கடந்த 29ம் தேதி கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, இன்று காலை 11 மணிக்கு யாகசாலை மண்டபத்திலிருந்து கடம் புறப்பட்டு விமான கலசம் மற்றும் ராஜகோபுரம் மற்றும் அனைத்து பரிவார சன்னதிகளின் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பச்டு, மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் எம்பி முரசொலி, எம்எல்ஏ சந்திரசேகரன்,  திருவையாறு ஐயாறப்பர் கோவில் கட்டளை விசாரணை சொக்கலிங்க தம்புரான்,  அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


அதே போல் தஞ்சாவூர் அருகே உள்ள வாளமரக்கோட்டையில் உள்ள சவுரந்தரநாயகி அம்பாள் உடனுறை சுந்தரஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த செப்.1ம் தேதி முளைப்பாரி எடுத்து முதலாம் கால யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து காலை, மாலை என ஆறு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான  கோவிலின் ராஜபகோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுர கலசங்களுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


பிலீக்கான் முனிஸ்வரர் கோவில்: தஞ்சாவூர் விளார் சாலையில் 61 அடி உயரத்தில் பீலிக்கான் முனிஸ்வரர் கோவில் அமைந்துள்ளது‌. வலது கையில் 25 அடி உயரத்திலான அரிவாளைப் பிடித்து இருப்பதுபோன்று மிகப் பிரம்மாண்ட சிலை நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு கடந்த 2ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து நான்கு கால யாகசாலைகள் பூஜைகள் நடத்தப்பட்டு இன்று மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்