சென்னை அங்காளபரமேஸ்வரி, காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை



சென்னை; சூளை அங்காளபரமேஸ்வரி மற்றும் காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் இன்று விமரிசையாக நடந்தது.


சூளையில் அங்காள பரமேஸ்வரி மற்றும் காசி விஸ்வநாத சுவாமி கோவில், நுாற்றாண்டு பழமை வாய்ந்தது. இக்கோவிலுக்கு, 2009ம் ஆண்டு கடைசியாக கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து, 28.56 லட்சம் ரூபாயில் கோவிலில் திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேகம் ஏற்பாடுகள் நடந்தன. இன்று காலை ஆறாம் கால பூஜை நடந்தது. அதைத் தொடர்ந்து, காலை 9:45 மணிக்கு கோபுர கலசங்கள், தங்க விமானத்திற்கும், காலை 10:15 மணிக்கு அனைத்து மூல மூர்த்தி விமான கலசத்திற்கும் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. இதில், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கமிஷனர் ஸ்ரீதர் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்