மருவத்தூர் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்



மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைதீஸ்வரன் கோவில் அருகில் உள்ள தருமபுர ஆதினத்தின் அருளாட்சிக்குட்பட்ட மருவத்தூர் கிராமத்தில் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமமும், வாஸ்து சாந்தி, கிராம சாந்தி பூஜைகள் செய்யப்பட்டு, முதல்கால யாக பூஜையில் 108 மூலிகை பொருட்கள், பழங்கள் சமித்துகள், நவதான்யங்கள் யாககுண்டத்தில் சமர்பிக்கப்பட்டு பூர்ணாஹூதி, தீபாராதனை காட்டப்பட்டது. இன்று காலை வைதீஸ்வரன் கோயில் தருமபுரம் ஆதீன கட்டளை விசாரனை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் யாகபூஜைகள் நிறைவு செய்யப்பட்டு புனிதநீர் அடங்கிய கடங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சார்யார்கள் தலையில் சுமந்து கோவிலை வலமாக வந்து கோபுர கலசங்களுக்கு புனிதநீரால் கும்பாபிஷேகம்  செய்து வைத்தனர். தொடர்ந்து காளியம்மன், சப்தகன்னியம்மன் மற்றும் பரிவாரங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் உயர்கல்வி துறை தஞ்சை மண்டல இணை இயக்குனர் குணசேகரன், பா.ஜ.க முன்னாள் மாவட்ட தலைவர் வெங்கடேசன்,  விஷ்வ ஹிந்து பரிஷத் மண்டல செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.  அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்