மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத் தேர் வீதியுலா



புதுச்சேரி: ஆயுத பூஜை விழாவையொட்டி, புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத் தேர் வீதியுலா நேற்று நடந்தது.


ஆண்டுக்கு ஒரு முறை மட்டும், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் உற்சவர் மூர்த்தி, தங்க தேரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆயுத பூஜை விழாவான நேற்றிரவு மணக்குள விநாயகர் தங்கத்தேர் வீதியுலா நடந்தது.


கவர்னர் கைலாஷ்நாதன், பாஜ., தலைவர் ராமலிங்கம், செல்வகணபதி எம்.பி., ஆகியோர் தங்கத் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அதனை தொடர்ந்து தங்கத்தேர் கோவிலில் இருந்து நேரு வீதி வழியாக வந்து மாட வீதிகளை சுற்றி தேர் பவனி நடந்தது.


ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பழனியப்பன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். 


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்