சிதம்பரம் நடராஜர் கோவிலில் புரட்டாசி மகா ருத்ர அபிஷேகம்



சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று நடந்த மகா ருத்ர அபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் புரட்டாசி மாத மகா ருத்ர அபிஷேகம் நேற்று நடந்தது. அதையொட்டி, நேற்று காலை உச்சிகால பூஜையை தொடர்ந்து, சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமி கனகசபைக்கு எழுந்தருளச் செய்து லட்சார்ச்சனை நடந்தது. யாக சாலையில் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை நடந்தது. மதியம் மகா ருத்ர ஹோமம், வஸோதார ஹோமம், மகா ருத்ர மகா பூர்ணாஹூதி, வடுக பூஜை, சுவாசினி பூஜை, தம்பதி பூஜை, கோபூஜை, அஸ்வபூஜை, கஜபூஜை நடந்தது. தொடர்ந்து, யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கனக சபையை அடைந்தது. கனகசபையில் மாலை 6:30 மணி முதல், இரவு 11:00 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு விபூதி, பால், தயிர், தேன், சர்க்கரை, பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீா், சந்தனம் புஷ்பம், உள்ளிட்டவை குடம், குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் சிவசுந்தர தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்