ஐப்பசி முதல் நாள்; கோவில்களில் சிறப்பு வழிபாடு.. பக்தர்கள் பரவசம்



கோவை;  துவாதசி திதி மற்றும் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு கோவை கே. என். ஜி. புதூர் அருகில் அமைந்துள்ள கோவை திருப்பதி கோவிலில் மூலவர் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு அபிஷேகம். பூஜை நடந்தது. இதில் தங்கக்காப்பு கவசத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 


ஐப்பசி மாதப்பிறப்பை முன்னிட்டு, கோவை ராம் நகர் பிரசன்ன மகாகணபதி கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் ராஜ அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  கணபதி ஹோமத்துடன் துவங்கிய விழாவில், தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம் தீபாரதனை ஆகியன நடைபெற்றது. நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்