செஞ்சி; செஞ்சி மாரியம்மன் கோவிலில் பெண்கள் கேதார கவுரி நோன்பு எடுத்து அம்மனை வழிபட்டனர். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் அமாவாசை அன்று பெண்கள் கேதார கவுரி விரதம் இருந்து பெண்கள் அம்மன் கோவில்களில் நோன்பு எடுத்து வருகின்றனர். இதன்படி நேற்று செஞ்சி கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவிலில் கேதார கவரி வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். கலச பிரதிஷ்டை செய்து சிறப்பு தீபாராதனை செய்தனர். கேதார கவுரி விரதமிருந்த நூற்றுக்கணக்கான பெண்கள் நோம்பு எடுத்து அம்மனை வழிபட்டனர்.