பொள்ளாச்சி; பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா துவங்கியது.
ஐப்பசியில் தீபாவளி பண்டிகை முடிந்த மறுநாளில் இருந்து பிரதமை திதியில் துவங்கி, சஷ்டி திதி வரையில் ஆறு நாட்கள் இந்த வைபவம் நடக்கும். பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு மிக்க கந்த சஷ்டி விழா இன்று துவங்கியது. விழா துவக்கத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் அருள்பாலித்தார். கோவிலில் ஏராளாமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவங்கினர். நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.